முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியூடர் குணசேகர காலமானார்.
கொரோனா தொற்றுக்குள்ளான அவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 86 ஆவது வயதில் காலமானார்.
அவர் 1977 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
போலந்து நாட்டிற்கான முதலாவது இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட டியூடர் குணசேகர, ருமேனியா, ஹங்கேரி மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளின் இராஜதந்திர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம், பொரளை பொது மயானத்தில் இன்று (30) மாலை நடைபெறவுள்ளன.

0 கருத்துகள்