இவர் பிரபல அரசியல்வாதியின் மகனல்ல. பெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்தவருமல்ல. தனது அதீத பந்து வீச்சு திறமையினாலும் அயராத முயற்சியினாலும் உலக T20 கிரிக்கெட் அரங்கில் இன்று கால் பதித்திருக்கிறார். மிக மோசமான இனவாதம் புரையோடிப் போயுள்ள தேசத்தில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஒரு அணியில் இடம் பெறுவதே மிகப் பெரும் சாதனை தான். பெறுபேறுகள் அனைத்தும் அதன் பின்னர்தான்.
தனது முதல் போட்டியில் சிறப்பான பெறுபேறுகளை பெற முடியாவிட்டாலும் இறைவன் அருளால் நேர்த்தியான அவரது பந்து வீச்சுப் பெறுதிகளால் இன்ஷா அல்லாஹ் கிரிக்கெட் அரங்கில் சாதிப்பார்.
கேவலம் கெட்ட பிரதேசவாதம் எத்தனை கொடியது என்பதை இன்றைய இவரது பந்துவீச்சு பெறுபேறை அவரது ஊர் சார்ந்த / பிரதேசத்துடன் உள்ள போட்டி பொறாமைகளால் விமர்சனம் செய்யும் கிணற்றுத் தவளைகளின் மூலம் கண்டு கொள்ள முடிகிறது.
இவர் இனிவரும் போட்டிகளில் பந்து வீச்சில் சிறந்த பெறுபேறுகளுடன் சாதனை புரிந்து தேசிய அணியிலும் இடம்பெற பிரார்த்திப்போம்.
Sajath Cassim

0 கருத்துகள்