அக்கரைப்பற்று மாநகர சபையின் கௌரவ முதல்வராக தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் ALM Athaullah அவர்கள் இன்று (2) சத்திய பிரமாணம் செய்து தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
தனது சத்தியப் பிரமாண நிகழ்வினை முன்னாள் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மருதமுனையைச் சேர்ந்த ரி.எல்.அப்துல் மனாப் அவர்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து தனது மேயர் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக தேசிய காங்கிரஸின் எம்.ஏ.றாசீக் அவர்கள் இன்று (02) சத்தியப்பிரமாணம் செய்து தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.