காத்தான்குடி நகரசபையின் புதிய தவிசாளர் பதவியேற்பு!

Ceylon M
0
காத்தான்குடி நகரசபையில் இன்று (02) சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் புதிய தவிசாளராக எஸ்.எச்.எம். அஸ்பர் பதவிப்பிரமாணம் செய்து, தனது அதிகார கடமைகளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி காத்தான்குடி நகரசபையின் மொத்த 10 ஆசனங்களையும் வென்றது. அதனடிப்படையில், கட்சி தலைவர் றவூப் ஹக்கீமினால் எஸ்.எச்.எம். அஸ்பர் தவிசாளராக நியமிக்கப்பட்டார்.

இப்பதவியேற்பு நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு காத்தான்குடி நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் பிரதித் தவிசாளராக எம்.ஐ.எம். ஜெஸீம் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதன்போது காத்தான்குடி நகரசபையின் உத்தியோகத்தர்கள், அதிகாரிகள், கட்சியின் ஆதரவாளர்கள், உலமாக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top