சார்ஜாவில் நடைபெற்ற அல்­குர்ஆன் மனனப் போட்­டியில் இலங்­கை அஷ்ஷேக் முஹம்மத் சப்வான் முஹம்மத் பாரூக் சாதனை!

Ceylon M
0 minute read
0


 ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இஸ்லாமிய மற்றும் அரபு மொழி ஆசிரியர்களுக்கு மத்தியில் நடை­பெ­ற்ற  அல்­குர்ஆன் மனனப் போட்­டியில் இலங்­கையைச் சேர்ந்த அஷ்ஷேக் முஹம்மத் சப்வான் முஹம்மத் பாரூக் ( மதனி, அப்பாஸி)

இப்போட்டியில்  இறுதிச் சுற்றுவரை முன்னேறி முதலாவது இடத்தைப் பெற்று  சாதனை படைத்துள்ளார்.

அஷ்ஷைஃக் சப்வான் மாத்தளை நிககொல்லையை பிறப்பிடமாக் கொண்டவர்.  காலி இப்னு அப்பாஸ் அரபுக் கலா­பீடத்தில் ஷரீஆக் கல்வியை பூர்த்தி செய்து மதீனா இஸ்லாமிய சர்வதேச பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டவியல் பீடத்தில் முதற்தர சித்தியில் தனது கலைமாணி பட்டப் படிப்பை பூர்த்தி செய்து தற்போது சார்ஜாவில் அரபு மற்றும் இஸ்லாமிய ஆசிரியராக பணிபுரிகின்றார்.

  பல்வேறு நாட்டைச் சேர்ந்த அரபு மற்றும் இஸ்லாமிய ஆசிரியர்கள் கலந்து கொண்ட  இப் போட்டியில் இலங்கை ஆசிரியர் ஒருவர் இறுதிச் சுற்று வரை முன்னேறி முதலாவது இடத்தைப் பெற்றது முதற்தடவையாகும்.

சார்ஜா கல்வி அமைச்சினால் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தகவல் ( பாயிஸ் அன்வாரி)


To Top