உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 267 பேரில் 33பேருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கண்டி தலாதா மாளிகைக்கு வழிபாட்டுக்குச் சென்ற அமைச்சர் அங்கு மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பில் தெளிவுபடுத்தும்போதே இவ்வாறு குறிப்பட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தினத்தில் 8 இடங்களில் குண்டை வெடிக்கச் செய்தமை தொடர்பான பொலிஸ் விசாரணை நடத்தப்பட்டு, அது தொடர்பான 8 விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபருக்கு கையளித்துள்ளோம்.
இந்தத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 267பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 33பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு வழக்கு தொடுக்க இருக்கின்றோம். சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிலர் சிறைச்சாலைகளிலும் மற்றும் சிலர் தடுப்புக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
Posted in:
