மேலும் நான்கு கைதிகளின் உடலங்களை எரிக்க உத்தரவு

ADMIN
0


மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறையில் உயிரிழந்த மேலும் நான்கு கைதிகளின் உடலங்களை எரிக்க உத்தரவிட்டுள்ளது வத்தளை நீதிமன்றம்.




கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில் சட்டச் சிக்கல்கள் காரணமாக எரியூட்டல் தாமதப்படுத்தப்பட்டு வந்தது. எனினும் பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தற்போது மேலும் நான்கு உடலங்களை எரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




தற்சமயம், கொரோனா மரணங்களை துரிதமாக எரியூட்டும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default