எம்.யூ.எம்.சனூன்
கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்களை எரிப்பதை நிறுத்தக் கோரி , இன்று(20) காலை நுரைச்சோலை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குழந்தையின் ஜனாஸா மாதிரி ஒன்றையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் பார்வைக்காக வைத்திருந்தனர்.
அமைதியான முறையில் கைகளில் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் முகக்கவசங்கள் அணிந்து சமூக இடைவெளிகளைப் பேணியவாறு சுகாதார முறையைப் பின்பற்றி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
