ஜனாஸா 'நாடகத்தை' முடித்து விடுங்கள்: தேரர் விசனம்!

ADMIN
0

 

2020 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்று வரும் ஜனாஸா நாடகத்தை அடுத்த ஆண்டுக்கும் கொண்டு செல்லாமல் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கிறார் அத்தரகம பஞ்சாலங்கார தேரர்.


கட்டாய ஜனாஸா எரிப்பு, அரசியல் நாடகம் என்பதில் தாம் மிகத் தெளிவாக இருப்பதாகவும் உலகமே அடக்கம் செய்ய அனுமதிக்கும் போது இலங்கையில் நடாத்தப்படும் இந்த அரசியல் நாடாகத்தின் பின் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்ற அவர், முஸ்லிம்கள் தாம் செறிந்து வாழும் பிரதேசங்களில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கிறார்.


அரசாங்கம் மாதக் கணக்கில் இழுத்துச் செல்லும் இந்நாடகம் அடுத்த வருடத்துக்கும் கொண்டு செல்லப்படக் கூடாது எனவும் இதனால் நாடு எந்த நன்மையையும் அடையப் போவதில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default