காலி, தெவட்ட பகுதியில் இன்று ஜனாஸா எரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு நிகழ்வொன்று இடம்பெற்றது.
இதன் போது, கட்டாய ஜனாஸா எரிப்பை நிறுத்துமாறு கோரி அஷ்ஷெய்க் லுத்பியின் சிங்கள மொழியிலான உரையொன்றும் இடம்பெற்றிருந்தது.
நாட்டின் பல பாகங்களில் கட்டாய ஜனாஸா எரிப்புக்கு எதிராக சிறுபான்மை சமூகத்தினர் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- A. Nyzer
