யடியன்தொட கராகொடையைச் சேர்ந்தவரும் கன்னத்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அல் ஹாஜ் ரவுப்தீன் (ரவ்ஸான் ஹாஜியின் தந்தை) காலமாகி கரவனல்ல வைத்தியசாலையில் வைக்கபட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை, 21 ஆம் திகதி ரவுப்தீன் ஹாஜியா பலாத்காரமாக தகனம் செய்யப்பட்டுள்ளார்.இந்தச் செய்தியை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர், நிகால் பாருக் உறுதிப்படுத்தினார்.
கொரோனா தொற்றினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்களை, எரிக்காமல் குளிரூட்டிகளில் பாதுகாத்து வைக்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஏற்கனவே அறிவித்திருந்தும், இவ்வாறு ஜனாஸா எரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
