திருகோணமலையில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் கடும் அடை மழை காரணமாக வெள்ள நீரில் மூழ்கடிப்பு

ADMIN
0

ஹஸ்பர் ஏ ஹலீம்

கடும் அடை மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன இதில் நேற்று இரவு முதல்(19) காலை வரையான அதிக மழை வீழ்ச்சி காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன இதில் கிண்ணியா, தம்பலகமம்,முள்ளிப்பொத்தானை உட்பட பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


தங்களது வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் காரணமாக இரவில் தூங்கமுடியாமை மற்றும் வீட்டு உபகரணங்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.நீர் வடிந்தோடக்கூடிய வகையில் உரிய பிரதேசங்களுக்கு சென்ற உள்ளூராட்சிமன்ற தவிசாளர்கள்,பிரதேச செயலாளர் போன்றோர்களும் களத்தில் நின்று நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதனையும் அவதானிக்க முடிகிறது.
சீரான வடிகான் அமைப்பு நீர் வடிந்தோடக்கூடிய அமைப்பிலான திட்டங்களை தங்களது பிரதேசத்துக்கு அமைத்து வெள்ள நீரில் இருந்து பாதுகாக்கவும் மேலதிக நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் வெள்ள அனர்த்தம் ஊடாக பாதிப்பில் அகப்பட்டோர்கள் உரிய அதிகாரிகளுக்கும் அரசிதல்வாதிகளுக்கும் கோரிக்கை விடுக்கின்றனர்கள்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default