சாய்ந்தமருதில் சுனாமி நினைவு தின துஆப் பிரார்த்தனை.

ADMIN
0

 

(நூருல் ஹூதா உமர்)


கடந்த 2004 உலகை தாக்கிய சுனாமி பேரலையின் 16வது ஆண்டு நினைவு தின துஆப் பிரார்த்தனையும் குர்ஆன் தமாம் செய்யும் நிகழ்வும் இன்று காலை அல்- மீஸான் பௌண்டஷன் ஏற்பாட்டில் சாய்ந்தமருது அக்பர் ஜூம்ஆப் பள்ளிவாசலில் மீஸான் பௌண்டஷன் தவிசாளர் நூருல் ஹுதா உமரின் தலைமையில் நடைபெற்றது. 


சுனாமியால் உயிர்நீத்த உறவுகளுக்கான துஆ பிரார்த்தனையை சாய்ந்தமருது அக்பர் ஜூம்ஆப் பள்ளிவாசலின் பேஷ் இமாம் அல்-ஹாபிழ் மௌலவி எம்.ஐ.எம். றியாஸ் (அல்தாபி) நிகழ்த்தினார்.


இந்நிகழ்வில் சாய்ந்தமருது அக்பர் ஜூம்ஆப் பள்ளிவாசலின் தலைவர் ஏ.இஸ்ஸதீன், உப தலைவர்கள், பொருளாளர் உட்பட நிர்வாகிகள், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் பிரதிச்செயலாளர் ஏ.சி.எம்.நிஸார் உட்பட செயற்குழு உறுப்பினர்கள், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ மஜீத், சாய்ந்தமருது சத்குரு மக்காம் தலைவர் எம்.ஏ.எம். ஜப்பார், சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் தலைவர் அஸ்வான் எஸ் மௌலானா, செயலாளர், பிரதித்தலைவர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default