பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் விவகாரங்களின் ஒருங்கிணைப்பு செயலாளராக இருக்கும் குமாரசிறி ஹெட்டிகே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இதை தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, அவர் நாடாளுமன்றத்திற்கு வந்து திரும்பும் வரை, அவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களை சி.சி.டி.வி மூலம் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
செயலாளர் குமாரசிறி ஹெட்டிகே ஜனவரி 8 ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தார்.
இதையடுத்து அவர் பார்வையிட்ட பகுதிகளை கிருமி நீக்கம் செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த நிலைமை காரணமாக நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு எந்த தடையும் இல்லை, வழக்கம் போல் கடமைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ கூறியுள்ளார்.
