மீளவும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அடிக்கல் நட்டுவைப்பு.!

 


யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைக் கட்டுவதற்குத் துணைவேந்தர் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளதை அடுத்து உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நிறைவு செய்துள்ளனர்.


இன்று அதிகாலை 3 மணியளவில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்த துணைவேந்தர் இந்த வாக்குறுதியை வழங்கியிருக்கிறார். 


அதன் படி இன்று காலை முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்