பேரூந்துகளுக்கான அவசர அறிவித்தல்
January 10, 2021
0
பேருந்துகளில் வாகன இலக்கத்தை காட்சிப்படுத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கொரோனா தொற்றாளர்களின் தொடர்புகளை இலகுவாக அடையாளம் காண முடியும் எனவும் அத்துடன் பயணிகள் தாம் பயணிக்கும் பேருந்துகளின் வாகன இலக்கத்தை குறித்து வைத்துக்கொள்வது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கொரோனா தொற்றாளர் ஒருவர் பேருந்தில் பயணித்திருந்தால் ஏனைய பயணிகளுக்கு அறிவிக்கவும் அவர்களை அடையாளம் காணவும் இது உதவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தனியார் மற்றும் அரச பேருந்துகளில் இவ்வாறு வாகன இலக்கம் காட்சிப்படுத்துவது அவசியம் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
