எவன்கார்ட் நிறுவன மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை வழக்கு தொடர்பான தீர்ப்பு மே மாதம் 21 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வழக்கு இன்று (28) கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்ய பட்டபெதிகே, மஞ்சுல திலகரத்ன மற்றும் மஹேன் வீரமன் ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

0 கருத்துகள்