மியான்மரில் 23 ஆயிரம் சிறை கைதிகள் விடுவிப்பு



மியான்மரின் பாரம்பரிய புத்தாண்டு தினத்தையொட்டி, சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 23,000-க்கும் மேற்பட்ட கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனா்.


இதுகுறித்து மியான்மர் அரசுக்குச் சொந்தமான எம்ஆா்டிவி தொலைக்காட்சி தெரிவிக்கையில்,


திங்கியான் புத்தாண்டு தினத்தையொட்டி, 23,047 சிறைக் கைதிகளுக்கு ராணுவ அரசின் தலைவா் மின் ஆங் லயிங் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா். இதுதவிர, மேலும் சில கைதிகளுக்கான தண்டனையையும் குறைத்து அவா் உத்தரவிட்டுள்ளாா் என தெரிவித்தது.


இந்த நிலையில் புத்தாண்டு தினத்தையொட்டி தற்போது விடுவிக்கப்பட்ட கைதிகளில், அவா்களும் அடங்கியுள்ளனரா என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்