சினாவின் தடுப்பூசி இலங்கையர்களுக்கு வழங்கப்படாது – சுகாதார அதிகாரிகள் உறுதி

சினாவின் சினோபார்ம் தடுப்பூசியின் பாதுகாப்பை சுகாதார அதிகாரிகள் உறுதி செய்யும் வரை இலங்கையர்களுக்கு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இதை தெரிவித்தார்.

இதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தடுப்பூசி குறித்த தரவுகளை பகுப்பாய்வு செய்து வருவதாக தொற்றுநோய்கள் தொடர்பான ஆலோசனைக் குழு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளன.

இதேவேளை இலங்கையிலுள்ள சீன நாட்டினருக்கு மட்டுமே தற்போது தடுப்பூசி வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்