கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை அரைவாசியாக குறைந்தது.


 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை சரியாக அரைவாசி

வரையிலும் குறைந்துள்ளன என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.


"கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை, இதற்கு முன்னர் நாளொன்றுக்கு 10ஆக இருந்தது. எனினும், தற்போது ஐந்து மரணங்களுக்கு குறைவாகவே இடம்பெறுகின்றன” என்றார்.

இதேவேளை, நோய் அறிகுறிகள் காரணமாக, சுயமாகவே வைத்தியசாலைகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது எனத் தெரிவித்த அவர், சுகாதார அமைச்சின் வழிகாட்டல்கள் இன்னும் கடுமையாக பின்பற்றினால், நோய்த்தொற்று சதவீதம் இன்னும் இன்னும் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்