கடத்தி செல்லபட்ட பஸ் வண்டி, நிறம் மாற்றப்பட்டு இலக்க தகடும் மாற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு.

 கடந்த 21 ஆம் திகதி அதிகாலை ஹங்வெல்ல, களுஅக்கல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

நிலையில் கடத்தி செல்லப்பட்டிருந்த பேருந்து ஒன்று நேற்று (26) பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சிசிரிவி காணொளிகள் மூலம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சப்புகஸ்கந்த பகுதியில் வைத்து குறித்த பேருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பேருந்தின் முன் பகுதி மற்றும் பின் பகுதியின் நிறம் மாற்றப்பட்டு இலக்க தகடும் மாற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


குறித்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்