யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி இன்று (23) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அதன்படி ,யாழ்ப்பாணம்q பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டதை அடுத்து, அன்றைய தினம் இரவு முதல் பாரிய போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் இதன் தாக்கம் காணப்பட்டது.
இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை மீள நிர்மாணிக்க பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது.
மேலும் ,இதையடுத்து, தற்போது புதிதாக மீள நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்