கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த 15 பேரும் பாராளுமன்றில் சஜித் பிரேமதாசவுடன் நெருங்கி பழகியதை கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றத்தில் சி.சி.டி.வி கெமரா தரவை சோதனை செய்த போது எதிர்க்கட்சித் தலைவருடன் தொடர்புடையவர்கள் என 15 எம்.பி.க்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதையடுத்து குறித்த 15 எம்.பிக்கள் தொடர்பில் உடனடி சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவருடன் தொடர்புடைய இரண்டு பாராளுமன்ற ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் தனது அலுவலகத்தில் பல கூட்டங்களில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்