தடுப்பூசிக்காக நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் – திருப்பியனுப்பிய அதிகாரிகள் – வத்தளையில் பதற்ற நிலை




வத்தளையில் தடுப்பூசியை செலுத்துவதற்காக சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதை தொடர்ந்து பதற்றமான நிலை இன்று காலை உருவானது.
நேற்று வத்தளை ஹெந்தல வீதியில் அமைந்துள்ள கெரவளப்பிட்டிய மருத்துவ சுகாதார அதிகாரியின் அலுவலகத்தில் நேற்று அப்பகுதி மக்களிற்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

இன்றும் அந்த பகுதி மக்களிற்கு தடுப்பூசி வழங்கப்படும் என பொலிஸாரும் சுகாதார அதிகாரிகளும் தெரிவித்திருந்தனர்.
இதன் காரணமாக இ;ன்று காலையிலேயே சென்ற பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

எனினும் இன்று காலை 9 மணிக்கு அப்பகுதிக்கு வந்த சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் அந்த பகுதியில் தடுப்பூசி வழங்கப்படுவது இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

வெளியில் அதற்கான அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரும் சுகாதார அதிகாரிகளும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான நிலை உருவானது
தெரிவு செய்யப்பட்ட மக்களிற்கு தெரிவு செய்யப்பட்ட நாட்களி;ல் தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் குறிப்பிட்ட பகுதி மக்களிற்கு குறிப்பிட்ட தினத்திலேயே தடுப்பூசிவழங்கப்படும் என அறிவிக்கப்படவில்லை என பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தங்களால் ஏதும் செய்ய முடியாத நிலை காணப்படுவதாக சில தாதிமார்கள் தெரிவித்துள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்