புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
"நகர பிதா பாயிஸ் பலத்த காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் பி.ப 7.00 மணியளவில் இவர் உயிரிழந்ததை வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து பாயிஸின சாரதி உள்ளிட்ட மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்" என அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள மூவரும் மதுபோதையில் இருந்த விடயம் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

0 கருத்துகள்