பிணை ஏற்பாடுகளில் திருத்தம்




குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவது தொடர்பான ஏற்பாடுகளை சட்டமா அதிபர் திருத்தி, புதிய வழிகாட்டுதல்களை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ளார்.

சிறைச்சாலை மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலை ஆணையாளரின் வேண்டுகோளின் பேரில் புதிய வழிகாட்டுதல் உருவாக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு சிறைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்