போர்ட் சிட்டி முதலாவது பணிப்பாளர் பதவிக்கு பசில் ராஜபக்ஷ




கொழும்பு போர்ட் சிட்டி ஆணைக்குழுவின் முதலாவது பணிப்பாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக அரச மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர்ட் சிட்டி சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து போர்ட் சிட்டி ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளதோடு முதலீடுகளும் சேர்க்கப்படவுள்ளன.

இந்நிலையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களை தொடர்புபடுத்தவும், ஈர்ப்பதற்கும் பசில் ராஜபக்ஷவுக்கு திறமை இருப்பதாக சுட்டிக்காட்டிவரும் அரச உயர்பீடம், ஆணைக்குழுவின் முதல் பணிப்பாளராக அவரை நியமிப்பதற்கும் கலந்துரையாடியிருப்பதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்