
(சி.எல்.சிசில்)
1990 சுவசெரிய அம்புலனஸ் சாரதியும் அவரது உதவியாளரும் இன்று அதிகாலை ஹட்டன் பகுதியில் தாக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக திம்புல பத்தன பொலிஸார் தெரிவித்தனர்.
திம்புல பத்தன, குடாகம பகுதியில் கட்டுமானப் பணி ஒன்றில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் பல்கனியிலிருந்து தரையில் விழுந்துள்ளதாக 1990 அம்புலன்ஸ் சேவைக்கு இன்று அதிகாலை 2.00 மணியளவில் தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது.
இதன்படி அம்புலன்ஸ் வண்டி சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளது. அம்புலன்ஸின் சாரதியும் அதன் உதவியாளரும் தரையில் விழுந்ததாகக் கூறிய ஊழியருக்கு எவ்வித காயங்களும் ஏற்படாததால் அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறியிருந்தனர்.
இதேவேளை மதுபோதையில் இருந்த ஒரு குழுவினர் அம்புலன்ஸ் சாரதியையும் அதன் பணியாளரையும் தாக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் ஹற்றன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
0 கருத்துகள்