மிக அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேற முடியும்..!!!


 

இன்று (21) இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நாடளாவிய ரீதியில் முழுநேர பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இதனையடுத்து மீண்டும் 25ம் திகதி இரவு 11 மணி முதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதற்கு முன்னர் அமுல்படுத்தப்பட்டதை போன்று இந்த பயணத்தடை கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.


இதன்படி, மிக அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேற முடியும்.


நடமாட்ட கட்டுப்பாடு அமுலாகும் காலப்பகுதியில் அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்