CID யில் இருப்பது உயிருக்கு அச்சுறுத்தல்! - ரிஷாதை சந்தித்த பின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்




(எம்.எப்.எம்.பஸீர்)

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஓர் அரசியல் கைதி என அவரது சட்டதரணி ருஷ்தி ஹபீப் இன்று (25) ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையிலேயே, அவரது கைது மற்றும் தடுத்து வைப்பை சட்டவிரோதம் என வர்ணித்த அவர், ரிஷாத் பதியுதீன் ஓர் அரசியல் கைதியாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

வெள்ளவத்தையில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்,

அவருக்கு எதிராக சாட்சிகள் இருந்தால், அதனை நீதிமன்றில் முன்வைத்து அவரை நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதனை விடுத்து இவ்வாறு தடுப்பில் வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.


எனவேதான் கைது, தடுப்பு வைப்புக்கு எதிராக நாம் உயர் நீதிமன்றில் அடிப்படை உருஇமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளோம்.



ரிஷாத் பதியுதீன், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர். அவ்வாறான ஒருவருக்கு சிஐடியில் தடுத்து வைத்து வைத்தியம் பார்க்க முடியாது. சிஐடி.யிலேயே பலருக்கு கொரோனா தொர்று ஏற்பட்டுள்ளதாகவும் அறிகிறோம். இவ்வாறான நிலையில் ரிஷாத் பதியுதீன் சிஐடியில் இருப்பது அவரது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்