பயண தடை 21ம் திகதி நீக்கப்பட்டு மீண்டும் 23 ம் இரவு 10 மணி முதல் 25 காலை 4 மணி வரை அமுல் படுத்தப்படும்


நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை, 

எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை பயணத்தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து கட்டுப்பாடு பொது நிகழ்ச்சிகள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகளுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை,

பயணத் தடை தளர்த்தப்படும் நாட்களில்  உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வசிப்பிடங்களுக்கும், காலி முகத்திடல்  போன்ற பொது இடங்களுக்கும் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்