கொழும்பு புஞ்சி பொரள்ள வீதியில் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக ஒரு அரச மரம் ஒன்றை அகற்ற வேண்டி இருந்தது.
குறித்த மரத்தினை அகற்றுவதற்கு சில பௌத்த பிக்குகளும் பொதுமக்களும் தடையாக இருந்ததால் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குறித்த மரத்தை அகற்ற முடியாமல் இருந்தனர்.
குறித்த விடயம் அன்று அமைச்சராக இருந்த மங்கள சமரவீர அவர்களுக்கு தெரிவிக்கப்பட்ட பொழுது நேரடியாக களத்திற்கு சென்று குறித்த மரத்தினை தனது கையால் அகற்றுவதற்கு ஜே.சி.பி (JCP) இயந்திரத்தினை இயக்கி குறித்த மரத்தினை அகற்றுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.
அமைச்சர் மங்கள சமரவீர அவர்களது இந்தச் செயலுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பௌத்த பிக்குகள் வீதிகளில் தேங்காய்களை உடைத்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தார்கள்.
அப்பொழுது அமைச்சராக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அல்ஹாஜ் எம் எச் எம் #அஷ்ரப் அவர்கள் பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார்கள்.
இன்று இந்த நாட்டிலே அமைச்சர் மங்கள சமரவீர அவர்களுக்கு எதிராக பௌத்த பிக்குகள் தேங்காய்களை நடு வீதிகளில் உடைத்து தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்...
கௌரவ சபாநாயகர் அவர்களே !
இந்த பௌத்த பிக்குகள் தேங்காய்களை மாத்திரம் உடைக்கவில்லை மாறாக அவர்கள் உடைத்துக் கொண்டிருப்பது புத்தபெருமான் போதித்த பௌத்த தர்மங்களையும் சேர்த்துதான் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இலங்கையினுடைய சிறுபான்மை மக்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களைப் போன்றவர்களை இந்த நாட்டின் தலைவர்களாக கொண்டுவந்திருக்க வேண்டும். ஏனெனில் இவரைப்போன்ற அரசியல்வாதிகள் மூலம்தான் சிறுபான்மையினர் தங்களை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி இருக்க முடியும்.

0 கருத்துகள்