வரையறுக்கப்பட்ட சதொச நிறுவனம் மற்றும் கூட்டுறவு மொத்தவிற்பனை நிலையங்கள் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் அனைத்து சேவைகளும் அத்தியாவவிசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபத கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 61 ஆவது இலக்கத்தின் பிரகாரம் அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் 2 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதியினால்குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச நிறுவனங்களும் இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்