திரிபோஷா பக்கெட்டுகள் திருட்டு



வி.சுகிர்தகுமார்

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் கண்ணகி கிராமத்தின் சுகாதார நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 30 திரிபோஷா பக்கெட்டுகள் திருடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிறை குறைந்த பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணிக்கு வழங்க வைத்திருந்த திரிபோஷா பக்கெட்டுகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக, ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தெரிவித்தார்.

சுகாதார நிலையத்தின் கதவுகளை உடைத்த திருடர்கள், இந்தத் திரிபோஷா பக்கெட்டுகளை எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்