எரிபொருள் விலை அதிகரிப்புக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டார் சஜித்!

 




எரிபொருள் விலை உயர்வுக்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.


இதன்படி ,நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறானதொரு முடிவை ‘மொட்டு’ அரசு எடுத்துள்ளமை வெட்கக்கேடாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது:-


மக்களுக்கு ஏற்ற வகையில் தங்களால் இந்த நாட்டை ஆள முடியாது என்பதை ‘மொட்டு’ அரசு ஏற்கவேண்டும்.


மேலும் ,ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே இந்த நாட்டுக்குச் செழிப்பையும் வளர்ச்சியையும் கொண்டு வர முடியும் – என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்