அரசாங்க ITN க்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் Mp எச்சரிக்கை விடுத்துள்ளார். விசாரணைக் கைதியாக சிறைச்சாலையில் உள்ள ஒருவருடன் தனக்குத் தொடர்பு இருந்ததாக ஊடகங்கள் பரப்பி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது. தீய நோக்கமுடையது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவை எங்கள் அரசியலில் எங்களுடன் தொடர்புடைய ஒருவரிடமிருந்து வந்தன; அவர் எங்களுடன் அரசியலில் பணியாற்றியபோது பல தொலைபேசி அழைப்புகளைச் செய்துள்ளார். பின்னர், அவரது உறவினர் சிறையில் அடைக்கப்பட்டபோது, அந்த உறவினர் விளக்கமறியல் சிறையில் அந்த சிம் கார்டைப் பயன்படுத்தியுள்ளார்.
இதுதான் இதன் உண்மைநிலை. அந்தச் செய்தியை வெளியிட்ட நபர் குறைந்தபட்சம், 'அப்படிப்பட்ட செய்தி எனக்கு வந்ததா என்று தொலைபேசியில் கேட்டிருந்தால், நான் அதற்குப் பதிலளித்திருப்பேன்' அரசியல் செயற்பாட்டுக்குழுவொன்று, குறிப்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதானிகள், எனக்கு எதிராக ஒரு திட்டமிட்ட, நற்பெயரைக் கெடுக்கும் சதியொன்றை முன்னெடுத்துள்ளார்கள்.
See less

0 கருத்துகள்