காலி வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவித்தல்

ADMIN
0


தெஹிவளையில் இருந்து கொழும்பு வரையிலான காலி வீதியின் போக்குவரத்து மெரின் ட்ரைவ் வீதிக்கு நாளை முதல் திருப்பி விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். 


கொழும்பு மாநகர சபையினால் வௌ்ளவத்தையில் முன்னெடுக்கப்படவுள்ள கழிவுநீர் பாதையை பழுது பார்த்தல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு வீதி மூடப்படுவதாக அவர் தெரிவித்தார். 


இதன் காரணமாக கொழும்பு - வௌ்ளவத்தை போக்குவரத்து பாதிக்கப்படாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default