இன்று தோண்டி எடுக்கும் ஹிஷாலினியின் பூதவுடல்...

ADMIN
0

 

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த ஜுட்குமார் ஹிஷாலினியின் பூதவுடல், இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது.


அதன்படி ,ஹிஷாலினியின் உயிரிழப்பில் சந்தேகம் காணப்படுகின்ற நிலையில், சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனையை நடத்தி, அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 26ம் திகதி உத்தரவிட்டது.


கொழும்பு நீதிமன்ற உத்தரவு, B அறிக்கையின் ஊடாக நேற்று நுவரெலியா நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, சடலத்தை தோண்டி எடுப்பதற்கான அனுமதியை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் பெற்றுக்கொண்டனர்.


சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, சடலத்தை தோண்டி எடுத்து, பலத்த பாதுகாப்புடன் சடலத்தை பேராதனை போதனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு நுவரெலியா நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.


மேலும் ,இதன்படி ஹிஷாலினியின் சடலம் பேராதனை வைத்தியசாலையில் வைத்து இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default