பயணக்கட்டுப்பாடு திங்களன்று நீக்கம்? மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து ஆரம்பமாகும்!
July 31, 2021
0
மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுமாயின் அன்றிலிருந்து பொதுப் போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமை (02) முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறெனில் பொதுப் போக்குவரத்தினை வழமைக்கு கொண்டுவர முடியும். அதேநேரம், சகல அரச சேவையாளர்களும், வழமைபோல் பணிகளுக்கு திரும்பவுள்ளதால், நெரிசல் நிலையை குறைப்பதற்கு பொதுப் போக்குவரத்தை வழமை போல இயங்க செய்ய வேண்டிய தேவையுள்ளது.
அந்தவகையில், சுகாதார நடைமுறைகளுடன் பொதுப் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
