கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்று (13) நடைபெற்றது.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம். பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கொவிட் 19 பொருளாதார தாக்கத்திற்கு மத்தியிலும் அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் இலங்கையில் கொவிட் 19 தாக்கத்தினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் அரசாங்கம் மக்கள் நலன் சார் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. கோரலைப்பற்று மேற்கு பிரதேச செயலக பகுதிற்குள் நிலவும் எல்லைப் பிரச்சினைகள், காணி பிரச்சினை, பொதுமக்கள் நிறுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள்,அரசாங்க நிறுவனங்களால் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு என்பன ஆராயப்பட்டது.
இங்கு மேலும் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் இங்குள்ள எல்லை பிரச்சினைகள் இன்று நேற்று உருவாகியது அல்ல யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலிருந்து இப்பிரச்சினை இருந்து கொண்டே வருகிறது. 2000ஆம் ஆண்டு மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுடைய காலப்பகுதியில் இதற்கான பன்னம்பலமே ஆணைக்குழு அமைக்கப்பட்டு இதற்கான தீர்வுகள் வழங்கப்பட்ட போதிலும் அவருடைய மரணத்திற்கு பிற்பாடு இப்பிரச்சினைகள் சரியான முறையில் அனுகப்படாமையினால் இன்று வரை இப்பிரச்சினைகள் தீர்க்கபடாது கிடப்பில் கிடக்கிறது. எனவே இப்பிரச்சினைகளை மிகவும் பக்குவமாக கையாள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் அரசாங்கத்தினுடைய முன்னோடியான வேலைத்திட்டமான விவசாய உற்பத்திகளை இரசாயன பாவனையிலிருந்து விடுபட்டு சேதனைப் பசளை பாவனையை ஊக்குவிக்கின்ற திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். இதனை நடைமுறைப்படுத்த அரச அதிகாரிகள் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்.அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் எமது பிரதேசத்தில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி திட்டங்களை எமது அதிகாரிகள் எழுத்து மூலம் எமக்கு சமர்ப்பித்தால் அதனை பெற்றுத்தர எம்மால் நடவடிக்கை எடுக்க முடியுமென்று குறிப்பிட்டார். மேலும் கோறளைப்பற்று மேற்கு மற்றும் மத்தி பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வீதிகளின் அபிவிருத்திக்கென நிதி ஒதுக்கீடுகள் செய்திருக்கின்றேன். அவ்வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு வருகிறது.
எமது பகுதிகளில் அண்மைக்காலமாக போதைவஸ்து விற்பனை மற்றும் பாவனை அதிகரித்துக் காணப்படுகிறது. இதிலிருந்து எமது மக்களை பாதுகாக்க வேண்டும். அதற்காக இதனோடு சம்பந்தப்பட்டவர்களை தகுதி,தராதரம் பார்க்காது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கின்றோம்.
இன்றைய பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதேச செயலாளர் வி. தவராசா, ஓட்டமாவடி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் கௌரவ ஏ.எம். நௌபர்,கௌரவ உறுப்பினர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.ரியாஸ் உட்பட அரச திணைக்களங்கள் , கூட்டுத்தாபனங்களின் அதிகாரிகள், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தளர்.
