இன்று இணையப் போகும் சஜித்-கரு கூட்டணி!!!

ADMIN
0




எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் முன்னாள் சபாநாயகரும், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை நடைபெறவுள்ளது.

கொழும்பு ஜானகி ஹோட்டலில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் நிகழ்வொன்று இன்று நடக்கவுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை அப்போது சந்தித்திருந்தார்.


அதன் பின்னர் இவ்விருவருக்கும் இடையே குறிப்பிடத்தக்க சந்திப்பு நடக்கவில்லை.

இந்த நிலையில் சமூக நீதிக்கான தேசிய இயக்கமானது, அரச அடக்குமுறைக்கு எதிரான அணியொன்றை உருவாக்குவதற்கான நோக்கில் இன்று மாலை விசேட கூட்டமொன்றை நடத்துகிறது. அதற்கு சஜித்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default