மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக் கிரியை இன்று (24) மாலை கொழும்பில் இடம்பெற்றது.

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக் கிரியை இன்று (24) மாலை பொரள்ளை பொதுமயானத்தில் இடம்பெறுகிறது.


நாராஹென்பிட்டி தனியார் மருத்துவமனையில் மங்கள சமரவீர காலமானதோடு, அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்து வந்த மங்கள சமரவீர, இன்று காலை திடீர் சுகயீனமுற்று காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


1994ஆம் ஆண்டு முதன்முறையாக மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு அரசியலுக்குள் பிரவேசித்த மங்கள, நிதியமைச்சு, தபால் மற்றும் தொலைத்தொடர்பு ஊடகம், வெளிவிவகாரம் உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார். அத்தோடு இலங்கை அரசியல் வரலாற்றில் எப்போதும் ஒரு பேசும் பொருளாக இவர் விளங்கிவந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்