துறைமுகத்தில் பணியாற்றும் 600 ஊழியர்களுக்கு கொவிட் என பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது!

துறைமுக அதிகார சபையில் பணியாற்றும் 600க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது என துறைமுக அதிகாரசபை அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


துறைமுக அதிகார சபையில் தற்போது 9,000 பேர் மட்டுமே பணியாற்றுவதாகவும், அவர்களில் 31 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன், தொற்று உறுதியான ஊழியர்கள் கொவிட் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்