
யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவில் 5.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆயினும் குறித்த நில நடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா, கிழக்கில் பிற்பகலில் மழை
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா, கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
0 கருத்துகள்