நாடளாவிய சேவைகள் தற்பொழுது இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நாடளாவிய சேவைகளுக்குரிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
1.SLAS
2.SLEAS
3.SLSS
4.SLPS
5.SLAcS
பட்டதாரிகள் இந்நிர்வாக ரீதியான போட்டி பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.எனினும் எமது ஊரிலுள்ள பட்டதாரிகள் (வயது 28 ற்கு உட்பட்ட) இப்போட்டிப்பரீட்சைகளில் கவனம் செலுத்துவது மிக குறைவாகவே உள்ளது.
இப்போட்டிப்பரீட்சைகளை எதிர்கொள்வது சற்று கடினம்தான் எனினும் இதில் முழு முயற்சியாக அர்ப்பணித்தால் நிச்சயம் வெற்றியடையலாபம்.
இப்பரீட்சைகள் மூலமாக கிடைக்கப்பெறும் அரச நிர்வாக பதவிகள் உங்களுக்கு மாத்திரமல்ல எமது சமுதாயத்திற்கும் பயனளிக்கக்கூடியதாகும். தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து அதில் வெற்றியும் பெற்றால் இந்த சமுதாயத்திற்கு செய்யக்கூடிய *மிகப்பெரிய சமூக சேவையாக இருக்கும்*
தகுதியான எமது இளைஞர்,யுவதிகளை இப்பரீட்சையை எதிர்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்,கல்விமான்களும்,சமூக ஆர்வலர்களும், சமூகதலைவர்களும் இந்த விடயத்தில் அக்கரை செலுத்துக்கள்.எமது சமூகத்தை நிர்வகிக்கக்கூடிய அதிகாரிகள் எம்மவர்களாக இருந்தால் பிற சமூகங்களுக்கிடையில் நாம் அடிபணிந்து போகவேண்டியதில்லை. நான் வயதில் சிறியவன் எனினும் இப்பரீட்சையின் முக்கியத்துவங்களைப்பற்றி மிக அறிவிந்தவன் என்பதனாலேயே இதனை உங்களிடம் பகிர்ந்துகொள்கின்றேன்.
*வாய்ப்புகளை தவறவிடாதீர்கள்* அதிகார ரீதீயாகவும் சமுதாயத்தை கட்டியெழுப்புவது நம் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.இதனை தகுதியானவர்களிடம் கொண்டுபோய் சேருங்கள்.ஊரிலுள்ள எமது சமுதாயத்திலுள்ள வளங்களை பயன்படுத்தி எமது இளைஞர்களுக்கு வழிகாட்ட முயற்சிசெய்யுங்கள். பிற சமூகத்தவர்கள் இப்பரீட்சையில் காட்டுகின்ற அக்கறையை விட எமது சமூகத்தில் குறைவாகவே உள்ளது.😔
நாடளாவிய சேவை
விண்ணப்ப முடிவுத்திகதி
15.08.2021
சுகாதார முகாமைத்துவ உத்தியோகத்தர்
தகமை :-
O/L -6 பாடங்கள் சித்தி
A/L - 3 பாடங்கள் சித்தி
முடிவுத்திகதி :-
03.08.2021
கிராம அலுவலர்
தகமை :-
O/L -6 பாடங்கள் சித்தி
A/L - 3 பாடங்கள் சித்தி
தயவுசெய்து தகுதியுள்ள இளைஞர்களை சென்றடையும் வரை பகிருங்கள்.
MMM.Zinda Mufas (sir)
Bsc(Hons) special in IT
Msc in Cyber Security
Software Engineer
University of Moratuwa.

0 கருத்துகள்