மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களினால் 2021/08/06 திகதி வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தின் பிரகாரம் மத்திய மாகாணத்தில் உள்ள சகல மதஸ்தலங்களிலும் கூட்டாக நிறைவேற்றக்கூடிய சகல வணக்க வழிபாடுகளையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு வேண்டப்பட்டுள்ளது. இதன்படி ஜும்ஆ தொழுகை, ஐவேளை ஜமாஅத் தொழுகை உட்பட ஏனைய அனைத்து கூட்டு செயற்பாடுகளையும் இடைநிறுத்துமாறு மத்திய மாகாணத்தில் உள்ள சகல பள்ளிவாயல்களினதும் நிருவாகிகளை வேண்டிக்கொள்கிறேன்.
இலங்கை வக்ப் சபையின் பணிப்புரைக்கு அமைய,
எம்.எல்.எம். அன்வர் அலி
பணிப்பாளர் (பதில்),
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்க ளம்.


0 கருத்துகள்