அமைச்சரவையில் பல மாற்றங்கள் - கல்வி, வெளிவிவகாரம், சுகாதாரம், ஊடகம் போன்ற அமைச்சுக்களில் அதிரடி

ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்த கெஹெலிய ரம்புக்வெல, சுகாதார அமைச்சராக சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.


கல்வி அமைச்சராக பதவி வகித்த G.L.பீரிஸ், வெளிவிவகார அமைச்சராகவும், வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த தினேஷ் குணவர்தன, கல்வி அமைச்சராகவும் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

மின்சக்தி அமைச்சராக பதவி வகித்த டளஸ் அழகபெரும, ஊடகத்துறை அமைச்சராக சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பொறுப்புக்கு மேலதிகமாக, நாமல் ராஜபக்ஸவிற்கு, அபிவிருத்தி இணைப்பு கண்காணிப்பு அமைச்சு பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த காமினி லொக்குகே, மின்சக்தி அமைச்சராக சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்