(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் -19 தொற்று ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் பாரிய நிலைமையை எதிர்வரும் இரண்டு மாதங்களில் அனுபவிக்க நேரிடலாம் என வைரஸ் தொடர்பான உலக முன்னணி பேராசிரியரான மலிக் பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய விஞ்ஞான அறக்கட்டளை நிகழ்வொன்றில் இணைய வழியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் சில வாரங்களில் அது இலங்கையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
பொது சுகாதார நிபுணராக நான் இவ்வாறு எச்சரிக்கை விடுக்காவிட்டால், நான் எனது பொறுப்பை தட்டிக்கழித்ததாக ஆகிவிடும். அதனால் இந்த புதிய வகை வீரியம் கூடிய டெல்டா வைரஸுக்கு எதிராக குறிப்பிடத்தக்க எதிர்தாக்குதலை மேற்கொள்ள தடுப்பூசி இரண்டு கட்டங்களையும் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.

0 கருத்துகள்