கொரோனாவால் மேலும் 189 பேர் மரணம்; மொத்த எண்ணிக்கை 10, 000ஐ கடந்தது

நாட்டில் மேலும் 189 கொவிட் மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன. 


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (04) மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது.


இதனையடுத்து, நாட்டில் மொத்த கொவிட் பலி எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ளது. 


நேற்று பலியானோரில் 96 ஆண்களும், 93 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


*இன்று இதுவரையில் 3,308 பேருக்கு கொவிட் தொற்று உறுதி*


இன்று இதுவரையில் 3,308 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 462,767 ஆக அதிகரித்துள்ளது. 


இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 2,081 பேர் குணமடைந்துள்ளனர். . 


இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 384, 557 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்