ஹிஷாலினி விவகாரம் - ரிஷாத், ரிஷாதின் மனைவி, மாமனாருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் - 2 பேர் பினையில் விடுதலை




நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த ஹிஷாலினி தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கின் முதலாவது சந்தேக நபரான தரகரும் 4 ஆவது சந்தேக நபரான ரிஷாத்தின் மைத்துனரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.




இன்று (06) கொழும்பு நீதிவான் ரஜின்த்ரா ஜயசூரிய முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதே இவர்கள் இருவரையும் பிணையில் விடதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், அவரது மனைவி மற்றும் அவரின் மாமனார் ஆகியோரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்